டெல்லி சிஏஏ எதிர்ப்பு வன்முறை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிரது.
மௌஜ்பூர் பகுதியில்இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவப்பு சட்டை அணிந்திருந்த ஷாருக் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோகுல் பூரி பகுதியில் நிகழ்ந்த மோதலில் தலைமைக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்தன். இதனால் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. 105 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் 10 இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து உள்துறை உயரதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, கலவரத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது இல்லத்தில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Next Story