சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : குற்றவாளி சீனிவாச ரெட்டிக்கு தூக்கு தண்டனை
3 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசிய நபருக்கு தூக்குத் தண்டனை விதித்த தெலங்கானா மாநில நல்லா குண்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ராவனி என்ற சிறுமி காணாமல் போனதாக கடந்தாண்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி, புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கிணற்றில் ஓரமாக கிடந்த மாணவின் பையை மீட்டு, கிணற்றின் உரிமையாளரான சீனிவாச ரெட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கிணற்றுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, பின் கொலை செய்து கிணற்றில் வீசியதை, அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, பிரேதத்தை மீட்க கிணற்றில் இறங்கி தேடியபோது மேலும் 2 சடலங்கள் கைப்பற்றப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற இரண்டு உடல்கள், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் காணாமல் போன மனிஷா மற்றும் நான்கு வருடத்திற்கு முன்பு காணாமல் போன கல்பனா என தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி சீனிவாச ரெட்டிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Next Story