"வங்கிகள் பயம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில், வங்கி மோசடிகளை தவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர் வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்றும் நேர்மையான முடிவுகள் எடுக்கும்போது வங்கி அதிகாரிகள் காரணம் இல்லாமல் பயப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரூபே, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Next Story