"நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12-ஆம் தேதிக்குள் உறுதி செய்து தெரிவிக்க வேண்டும்" - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12-ஆம் தேதிக்குள் அரசும், போலீசாரும் உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12-ஆம் தேதிக்குள் உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், இந்த  வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், நித்யானந்தாவை, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, பிடதி ஆசிரம முன்னாள் சீடர் லெனின் கருப்பன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  வரும் 12-ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கர்நாடக போலீசாரும் கர்நாடக அரசும் அறிந்து, நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்