"காய்கறிகளுக்கு தமிழகத்தை நம்பி இருந்த நிலை மாறியுள்ளது" - பினராயி விஜயன்
காய்கறி உற்பத்தியில் கேரள மாநிலம் தன்னிறைவு நோக்கி முன்னேறி வருவதால் தமிழகத்தின் காய்கறிகள் இனிமேல் தேவைப்படாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
காய்கறி உற்பத்தியில் கேரள மாநிலம் தன்னிறைவு நோக்கி முன்னேறி வருவதால் தமிழகத்தின் காய்கறிகள் இனிமேல் தேவைப்படாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், நதிநீர் பங்கீடு பேச்சு வார்த்தையின் போது, தமிழகத்தில் இருந்து வரும் காய்கறி மற்றும் பாலுக்கு பதில் தண்ணீர் தர வேண்டும் என்று தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிட்டதாக தெரிவித்தார். தமிழகத்தின் காய்கறிகளை நம்பி இருந்த நிலை தற்போது மாறி உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Next Story