தங்களது உறவினர்களை அரசு பணியில் நியமிக்க கூடாது - மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு
தங்களது உறவினர்களை அரசு பணியில் நியமிக்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
தங்களது உறவினர்களை அரசு பணியில் நியமிக்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் தினமும் காலை ஒன்பதரை மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் தெரிவித்த அவர், சிலரே இதனை கடைப்பிடிக்கும் நிலையில், அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சர்கள் பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story