கடலோர மக்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் : சட்டவிரோத ஊடுருவலை தடுக்க முயற்சி

கடலோர மக்களின் பாதுகாப்புக்காக 177 பேருக்கு பயிற்சி அளித்து கடலோர காவலர்களாக கேரள அரசு நியமித்துள்ளது.
கடலோர மக்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் : சட்டவிரோத ஊடுருவலை தடுக்க முயற்சி
x
கடலோர மக்களின் பாதுகாப்புக்காக 177 பேருக்கு பயிற்சி அளித்து கடலோர காவலர்களாக கேரள அரசு நியமித்துள்ளது.   கேரள கடற்கரை பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 177 பேர் 4 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர்.  அவர்களில் பயிற்சி  நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன்,  பின்னர் பேசுகையில், கடலோர காவலர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என வாக்குறுதி அளித்தார். இந்த கடலோர காவலர்கள்  சந்தேகத்திற்குரிய படகுகளை கண்காணித்தல், கடலோரங்களில் ரோந்து,  விபத்துகளை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என கேரள அரசு கூறியுள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்