கோடை விடுமுறை நேற்று நிறைவு : உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்குகிறது
கோடை விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.
கோடை விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் உச்சநீதிமன்றம் வழக்கம் போல் செயல்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிரப்பப்படாமல் இருந்த நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதால் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அயோத்தி நில விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது தொடர்பான வழக்கு மற்றும் ரஃபேல் விமான கொள்முதலை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கு, ராகுல் காந்தி மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகிய முக்கிய வழக்குகள் இனி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story