ஏழுமலையான் கோயிலில் வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டிற்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது தனது வழக்கம் என தெரிவித்தார். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இங்கு சுவாமி தரிசனத்திற்கு வரவேண்டும் என்றும், இதனால், பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஊழல் பசி, இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு விருப்பம் தெரிவித்தார். தீவிரவாதம் ஒழியவும், உலக அமைதி, இயற்கை மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட பிரார்த்தனை செய்ததாகவும் அவர் கூறினார்.
Next Story