ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வாராந்திர விடுமுறையையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வாராந்திர விடுமுறையையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் அனுப்பி வைக்கப்படும் வழியான வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, பக்தர்கள் வெளியே 2 கிலோமீட்டர் வரை காத்திருக்கின்றனர். மேலும், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனத்திலும், பக்தர்கள் மூன்றிலிருந்து 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 360 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை வருமானம் 2 கோடியே 64 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்