சதாப்தி ரயிலில் சவுகிதார் வாசகத்துடன் தேநீர் கோப்பை

பயணிகள் அதிருப்தி - தேர்தல் ஆணையத்துக்கு புகார்
சதாப்தி ரயிலில் சவுகிதார் வாசகத்துடன் தேநீர் கோப்பை
x
பிரதமர் மோடி, மற்றும் பாஜக தலைவர்கள்  தங்களை சவுகிதார் என அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில்,  ரயில் பயணிகளுக்கு  சவுகிதார் வாசகங்கள் இடம் பெற்ற கோப்பைகள்  மூலம் தேநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிருப்தி அடைந்த பயணிகள் உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கும், ரயில் அமைச்சகத்துக்கும் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளனர்.  இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள IRCTC நிறுவனம்,  முறையான அனுமதி பெறாமல் தேநீர் கோப்பையில் விளம்பரம் செய்த contract நிறுவனத்திற்கு irctc சார்பில் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த கோப்பைகள்  உடனடியாக மாற்றப்பட்டு, கண்ணாடி குவளைகளில் தேநீர் வழங்கப்பட்டதாக  கூறியுள்ளது.   ரயில் அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், சங்கல்ப் என்கிற தொண்டு நிறுவனம் விளம்பர நோக்கத்தில்  வழங்கிய தேநீர் கோப்பை என்றும், அவற்றை திரும்பப் பெறுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரருக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்