காங். எம்.எல்.ஏக்கள் 12 பேர் ராஜினாமா செய்கிறார்களா..? : 12 பேரும் பாஜகவில் இணையப் போவதாக தகவல்

கர்நாடகாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங். எம்.எல்.ஏக்கள் 12 பேர் ராஜினாமா செய்கிறார்களா..? : 12 பேரும் பாஜகவில் இணையப் போவதாக தகவல்
x
கர்நாடக மாநிலத்தில், கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்  குமாரசாமி, முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள, 104 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பா.ஜக, கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

* அதன் ஒரு பகுதியாக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, தங்களது பக்கம் இழுக்கும் வேலைகளில் பாஜகவினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

* மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள், வருகிற 16-ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் சேர திட்டமிட்டிருப்பதாக கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்