மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்தம் - வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு - ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி, இன்று, இந்த வேலை நிறுத்தம் துவங்குகிறது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, வங்கி பரிவர்த்தனை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பேருந்து சேவை முடங்கும் என்று தொ.மு.ச செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
Next Story