ஏழுமலையான் கோவில் 4 மாட வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு மாட வீதி ஆயிரத்து 380 கண்காணிப்பு கேமராவின் கீழ் கொண்டு வரப்படும் என, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் கோவில் 4 மாட வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள்...
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு மாட வீதி ஆயிரத்து 380 கண்காணிப்பு கேமராவின் கீழ் கொண்டு வரப்படும் என, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இந்த மாதம் ஜனவரி 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்தில் இரண்டு நாட்களுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறினார்.  மேலும், இம்மாதம் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் இரண்டரை கோடி ரூபாய் செலவில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஷ்வர சுவாமி  கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்