அபாய சங்கிலியை இழுத்ததால் இரும்பு பாலத்தில் நின்ற ரயில்
உயிரை துச்சமெனக் கருதி செயல்பட்ட ரயில்வே பாதுகாவலர்
கர்நாடகாவில் இரும்பு பாலத்தில் சென்ற ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய நிலையில், அதனை ரயில் பாதுகாவலர் துரிதமாக செயல்பட்டு சரிசெய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாதம் 26-ந் தேதி சாம்ராஜ் நகர்- திருப்பதி இடையே சென்ற விரைவு ரயில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா ரயில் நிலையம் அருகே இரும்பு மேம்பாலத்தில் சென்றது. அப்போது, மர்மநபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் மேம்பாலத்தில் நின்றது. அபாயகரமான அந்த பாலத்தில் ரயில் நின்ற நிலையில், அங்கிருந்த ரயில்வே பாதுகாவலர் விஷ்ணுமூர்த்தி, தைரியமாக பாலத்தில் இறங்கி, ரயில் மீண்டும் இயங்க வழிவகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகக் பரவி வருகிறது. இதையறிந்த விஷ்ணுமூர்த்தியை பாராட்டிய ரயில்வே பொதுமேலாளர் அஜய்குமார் சிங், அவருக்கு சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story