ஒன்றரை வயது குழந்தையை மீட்க 6 தனிப்படை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயது குழந்தையை மீட்க 6 தனிப்படை
x
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரசந்தா என்பவர் தமது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலைக்கு வந்துள்ளார். அரசு பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள மண்டபத்தில் இரவு  தூங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு  எழுந்த போது, அவரது அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை வீரேஷ் காணாமல் போனதை  கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருமலை காவல் நிலையத்தில்  பிரசந்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை  ஆய்வு செய்து குழந்தையை கடத்தியவ​ரின் புகைப்படங்களை வெளியிட்டு தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்கும் காட்சியும், பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை உள்ள சி.சி.டி.வி. பதிவுகளில் குழந்தையை கடத்தியவரின் காட்சிகளும் பதிவாகி உள்ளன. திருப்பதி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது குற்றவாளியை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உள்ள முக்கியமான மாவட்டங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் மூன்றாவது  இடத்தில்  உள்ள திருப்பதி ரயில் நிலையத்தில்  சி.சி.டி.வி. போதிய அளவில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்