ராஜஸ்தான் அமைச்சரவை பதவியேற்பு விழா - 23 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்

ஆளுநர் கல்யாண்சிங் முன்னிலையில் 23 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
ராஜஸ்தான் அமைச்சரவை பதவியேற்பு விழா - 23 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்
x
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் ஏற்கனவே பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சர்கள் பதவியேற்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடந்த விழாவில், ஆளுநர் கல்யாண்சிங் முன்னிலையில், 23 பேர் அமைச்சர்களாக  பதவிப் பிரமாணம் ஏற்றுக்  கொண்டனர். முதன் முறை எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற இளைஞர்களும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்