தம்பதியர் கொடூர கொலை - பணியாள் தலைமறைவு
ஆவடி அருகே சேக்காட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஜெகதீசன், விலாஷினி தம்பதியர் இன்று காலை வீட்டினுள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
ஆவடி அருகே சேக்காட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஜெகதீசன், விலாஷினி தம்பதியர் இன்று காலை வீட்டினுள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிடவையும் கொள்ளை போயிருந்தது. இந்நிலையில் அவர்கள் வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த ஆந்திரவை சேர்ந்த சுரேஷ் தலைமறைவாகியுள்ளதால், போலீசாரின் சந்தேகம் அவர் மீது திரும்பியுள்ளது. தலைமறைவாக உள்ள சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.இதனிடையே சொத்து தகராறு காரணமாக ஜெகதீசனின் முதல் மனைவி சுகுமாரியிடமும் விசாரணை நடைபெறுகிறது.
Next Story