"சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சிறப்பம்சம் உள்ளது" - முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு, அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்து கண்டிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சிறப்பம்சம் உள்ளது - முதலமைச்சர் பினராயி விஜயன்
x
அனைத்து நம்பிக்கை உள்ளவர்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரலாம் என்பது வேறு எந்த கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை என்று குற்றச்சாட்டிய பினராயி விஜயன், சபரிமலைக்கே உரிய  தனித்தன்மையை சிதைக்க அவர்கள் பலமுறை முயன்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆதிவாசி சமூகத்தினர் அய்யப்பன் கோயிலில் நடத்தி வந்த பூஜைகளை நீக்கியதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளின்  பங்களிப்பு உலகமறிந்தது என்றும் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். அய்யப்பன் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களை ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இயங்குபவர்கள் தாக்குவதுடன், தீவிரவாதத்தை அரங்கேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். 

இத்தகைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினால், சபரிமலை போன்ற இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்