ராமாயண மாதம் கொண்டாடும் கிறிஸ்தவ பாதிரியார்

கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார் ஏற்பாட்டில், ராமாயண மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமாயண மாதம் கொண்டாடும் கிறிஸ்தவ பாதிரியார்
x
ராமர் கோவில் தொடர்பாக விவாதம் நீடித்து வரும் நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கர்க்காடகம் என்ற இடத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் ஏற்பாட்டில், 'ராமாயண மாதம்' கொண்டாடப்படுகிறது. அங்குள்ள புனித மேரி இம்மாகுலேட் தேவாலயத்தின் பாதிரியாரான ரோபி கன்னன்சிரா, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலமாக, இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பல்வேறு மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை போன்றவை உறுதி செய்யப்படுவதாக ரோபி கூறியுள்ளார். மேலும், பிற மதங்களை மதிப்பதே ஒரு மதத்துக்கு சிறப்பு எனவும் இது போன்ற விழாக்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாகுலேட் தேவாலயத்துக்கு சொந்தமான 'சவாரா கலாச்சார மையத்தில்' 30 நாட்களுக்கு ராமாயண கதை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய முதல் நாள் நிகழ்வில், ஜெர்மனியை சேர்ந்த கார்டினல் ரைனர் மரியா வோல்கி பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்