ஆந்திரா, ஒடிசா எல்லையில் கனமழை - தண்டவாளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

ஆந்திராவில் கனமழை காரணமாக வெள்ள நீரில் ரயில்கள் சிக்கிக் கொண்டுள்ளன.
ஆந்திரா, ஒடிசா எல்லையில் கனமழை - தண்டவாளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
x
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில எல்லைப்பகுதியில் உள்ள ராயகட் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்கள் நிரம்பியதோடு, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், புவனேஸ்வரில் இருந்து ஹீராகண்ட் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ராயகட் மாவட்டம் பாலுமுக் ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதேபோல், அருகில் உள்ள சிங்கிபுரம் ரயில் நிலையத்தில், மற்றொரு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் தண்டவாளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, ரயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்