எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்..! ரஜினிகாந்த் பரபரப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பீஸ்ட் படம் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால், இயக்குநரை மாற்றுமாறு விநியோகஸ்தர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இருப்பினும் நெல்சன் கூறிய கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், எந்தவித சமரசமுமின்றி நெல்சன் படத்தை எடுத்து முடித்ததாகவும் ரஜினி குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே தொல்லைதான் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு முன்னரே அந்த டைட்டிலை நீக்குமாறு கூறியதாக நினைவுக்கூர்ந்தார்.
Next Story