கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் வெளியான நாள் - பொன்மாலைப் பொழுது பாடல் வெளியாகி 40 ஆண்டுகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான பொன் மாலைப் பொழுது பாடல் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிறது.
கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் வெளியான நாள் - பொன்மாலைப் பொழுது பாடல் வெளியாகி 40 ஆண்டுகள்
x
இப்படி தமிழ் திரையுலகில் பல முத்தான பாடல்களை கொடுத்து தனக்கென தனி  பதித்தவர் கவிஞர் வைரமுத்து.

இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்கு அவர் எழுதிய பாடல்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது வருகிறது.  படித்தவர் முதல் பாமரர் வரை ரசிக்கும் இசையில், வைரமுத்துவின் பாடல்கள் என்றும் மனதில் நின்று ரீங்காரம் பாடி வருகிறது.

இவருக்கு திரைத்துறையில் அறிமுகம் கொடுத்த படம், இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியான நிழல்கள் என்ற திரைப்படம். இந்த படத்தில், பொன்மாலைப்பொழுது பாடலை   வைரமுத்து எழுதினார். இந்த பாடல் தான் திரையுலகில் வைரமுத்துவுக்கு ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

இந்த பாடல் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துள்ளது. அவரது மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வந்தாலும், தன் 40 ஆண்டு திரையுலகப் பயணத்தில் இன்றும் ஒரு ஜாம்பவானாகவே இருக்கிறார் கவிஞர் வைரமுத்து. 
தனது படைப்புகளுகாக 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள வைரமுத்து, தனது இலக்கியங்களாலும், தமிழர்கள் மத்தியில் வரலாறாக நிற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்