சூர்யாவின் "காப்பான்" படத்திற்கு தடை கோரி வழக்கு - செப்டம்பர் 4ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

நடிகர் சூர்யா நடித்துள்ள "காப்பான்" படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சூர்யாவின் காப்பான் படத்திற்கு தடை கோரி வழக்கு - செப்டம்பர் 4ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
x
நடிகர் சூர்யா நடித்துள்ள "காப்பான்" படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தன் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறி, இந்த படத்தை தடை செய்ய சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, படத்துக்கு தடை விதிக்க கூடாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்