இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க பாரதிராஜாவுக்கு இணை இயக்குநர்கள் வலியுறுத்தல்
இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தி தேனாம்பேட்டையில் உள்ள பாராதிராஜாவின் அலுவலகத்தில் இணை இயக்குனர்கள் கடிதம் அளித்தனர்.
இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தி தேனாம்பேட்டையில் உள்ள பாராதிராஜாவின் அலுவலகத்தில் இணை இயக்குனர்கள் கடிதம் அளித்தனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் 2019-2021ஆம் ஆண்டிற்கான தலைவர் பதவிக்கு இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மற்ற பதவிகளுக்கான இறுதி பட்டியல் வெளியாகும் முதல் நாள் தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இதனால் வரும் 14ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தலைவர் பதவியை
மீண்டும் பாரதிராஜா ஏற்க வலியுறுத்தி இணை இயக்குநர்கள் கடிதம் வழங்கினர்.
Next Story