கைதாகும் இஸ்ரேல் பிரதமர்?..ஆட்டத்துக்கு முடிவு கட்டும் ICC - ஷாக்கில் அமெரிக்கா

x

இஸ்ரேல் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைக்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காசா மீது தொடர் போர் தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அழுத்தங்கள் அதிகரித்துள்ளதால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்யப்படலாம் என்றும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதற்கான வாரண்டை பிறப்பிக்க தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிப்ப‌து குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் இஸ்ரேல் இல்லை அந்நாடும், காசா, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் அதிராக வரம்பில் வருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் கூறி வருகிறது. இது தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜேன் பீயர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்றார். மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் இந்த விவகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்