அசந்தால் ஆப்படிக்கும் லக்னோ..மும்பைக்கு வாழ்வா சாவா ஆட்டம்..களத்தில் கலக்கப்போகும் அணி எது?

x

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 48வது லீக் போட்டியில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் , இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளன. எனவே, வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முனைப்பு காட்டக்கூடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்