கண் விழித்து பார்த்ததும் காத்திருந்த ஷாக் - காவலர் வீட்டு சுவற்றில் பயங்கரவாத வாசகங்கள்...

x

கண் விழித்து பார்த்ததும் காத்திருந்த ஷாக்

காவலர் வீட்டு சுவற்றில் பயங்கரவாத வாசகங்கள்

விசாரணையில் வெளிவந்த பகிர்

ஒசூரை ஒட்டியுள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் பண்டாபுரா கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர், பெங்களூர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். அதிகாலை வேளையில் வீட்டில் இருந்து வெளியே வந்தவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. தனது வீட்டு சுவற்றில்

பயங்கரவாத வாசங்கள் எழுதி இருப்பதைக் கண்டு காவலர் முனிராஜ் அதிர்ந்து போயுள்ளார். ஆங்கிலத்தில் எழுதி இருந்த அந்த வாசகத்தில் "மூன்றாம் உலக போர்" என்றும், "எச்சரிக்கை" உள்ளிட்ட பல வாசங்கள் எழுத்துப் பிழையுடன் இருந்தன. இதுகுறித்து முனிராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, எழுதிய நபரை கண்டறிய, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், சந்தேகப்படும்படியாக எந்த நபரும் சிசிடிவி காட்சியில் பதிவாகாத நிலையில், போலீசாரின் பார்வை வீட்டின் உரிமையாளரான காவலர் முனிராஜின் பக்கமே திரும்பியது. முனிராஜிடம் போலீசார் வழக்கமான பாணியில் விசாரிக்க, ஒரு கட்டத்தில் தாமே பயங்கரவாத வாசகங்களை எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் முனிராஜை காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்