விடுதலை-2.. வெளிச்சத்துக்கு வந்த பிரச்சினை.. கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கும் வீடியோ

x

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் பரபரப்பி ஏற்பட்டுள்ளது... விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை 2 படம் தயாராகி வரும் நிலையில் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது... இப்படத்தில் நடிக்க துணை நடிகர்களை மதுரையிலிருந்து சிலர் அழைத்து வந்த நிலையில் அவர்களுக்கு பேசிய ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊதியம் பேசி 350 ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பி வைத்ததாக துணை நடிகர்கள் சிலர் தென்காசி ரயில் நிலையம் முன்பு பிரச்சினை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்